உங்களில் பெரும்பாலோனருக்கு timelyஆப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கூகிள் ப்ளே ஸ்டோர் இல் 2013 ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த முறையில் டிசைன் செய்யப்பட்ட ஆப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது. டிசைன் மட்டுமா? அது மட்டுமல்ல. அதன் செயல்பாடுகளும் மிக அருமை. இது ஒரு அலார்ம் ஆப். அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? 1. உங்களிடம் ஒன்றிற்கு மேற்பட்ட போன் அல்லது டேப்லெட் இருந்தால் அனைத்திலும் அலாரம் அடிக்கும். ஒன்றில் ஸ்நூஸ் செய்தால் அனைத்திலும் ஸ்நூஸ் ஆகும். ஒன்றில் டிஸ்மிஸ் செய்தால் அனைத்திலும் டிஸ்மிஸ் ஆகிவிடும். ஒரு வேலை உங்கள் போன் இல் சார்ஜ் இறங்கிவிட்டால் அடுத்த போன் அல்லது டேப்ளேட் இல் அலாரம் அடிக்கும். 2. போன் ஐ கையில் எடுக்கும் போதே அலாரம் சத்தம் பாதியாக குறைந்து விடும் 3. அலாரத்தை நிறுத்த பேட்டர்ன் லாக் அல்லது புதிர் போன்றவற்றை நீங்கள் செட் செய்து கொள்ளலாம். 4. மிக முக்கியமாய் பொதுவான அலாரம் ஆப் இல் ஸ்நூஸ் செய்து விட்டால் திரும்பவும் கேன்சல் செய்யும் வசதி இருக்காது. உதாரணத்திற்கு பத்து நிமிடம் ஸ்நூஸ் செய்து விட்டீர்கள். ஆனால் உங்களுக்கு விழிப்பு வந்த...
link bubble என்ற ஒரு ஆண்ட்ரைடு செயலி கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.. மிக மிக மிக அற்புதமான ஒரு செயலி இது. நீங்கள் கூகிள் ப்ளஸ் அல்லது பேஸ்புக் இல் உலாவிக் கொண்டிருக்கும் போது ஒரு நிரலி (url) ஐ திறக்க வேண்டும் என்றால் அந்த பேஸ்புக் அல்லது கூகிள் ப்ளஸ் இல் இருந்து பிரவுசர் க்கு சென்று அதைப்படித்து விட்டு திரும்பவும் கூகிள் ப்ளஸ் க்கு செல்ல வேண்டும் என்பது தான் நடைமுறை. இந்த செயலியை உபயோகப்படுத்தும் போது வெப்சைட் ஆனது உங்கள் கூகிள் ப்ளஸ் செயலியின் ஒரு ஓரத்தில் (பார்க்க படம்) இல் லோட் ஆகி இருக்கும். நீங்கள் மற்ற ஸ்டேடஸ் களை படித்துக் கொண்டு வேண்டும் போது அந்த நிரலை பார்க்கலாம். அல்லது அந்த வட்ட பொத்தானை அழுத்த உடனடியாக (பேஸ்புக் messenger) போல அந்த நிரல் கூகுள் ப்ளஸ் ன் மேலேயே தோன்றும். நீங்கள் படித்து முடித்த உடன் பேஸ்புக் messenger போலவே இழுத்து கீழே விடுவதன் மூலம் மூடி விடலாம். வழக்கம் போல் இலவசம் மற்றும் பணம் செலுத்தி பெறல் என இரு பரிமாணங்களில் இந்த செயலி கிடைக்கிறது. இலவச செயலியில் நீங்கள் ஏதேனும் ஒரு செயலி (Google plus அல்லது facebook அல்லது இன்ன பிற..) இருந்து மட்டும் இந்...